ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றன. தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள இந்த ராயன் படம் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது. 

தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பிடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருவனந்தபுரம் தியேட்டரில், நடிகர் தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த வாலிபரை கேரள சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பதும், இவர் புதுப்படங்களை செல்போனில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே தியேட்டரின் இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்து ஒரு படத்திற்கு ரூ.5,000 கமிஷன் பெற்று இணையதளத்தில் ஸ்டீபன் ராஜ் பதிவேற்றம் செய்து வந்ததும் தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for take vedio rayan movie in theater


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->