மோசமான படம்.. மாநாடு படத்தை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படம் 'டைம் லூப்' என்ற கருவை மையமாக கொண்டு திரைப்படம் ஆக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், வெங்கட்பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

நிருபர் : உங்களுக்கு இந்த வருடம் வந்த திரைப்படங்களில் மிகவும் பிடிக்காத ஒரு திரைப்படம் என்ன? என்று ஒருவரிடம் கேள்வி எழுப்பினார்.

அந்த நபர் : மாநாடு திரைப்படம் தான் எனக்கு பிடிக்காது என்கிறார்.

நிருபர் : ஏன் மாநாடு பிடிக்காது?

அந்த நபர் : அதே காட்சியை ஒளிபரப்புகிறார்கள்., எனக்கு ஒன்றுமே புரியவில்லை., தலைவலியே வந்துவிட்டது., அந்த படத்தில் கதையும் இல்லை., ஒன்றும் இல்லை., அந்த ஒரே ஆக்ஷன் கட்சியை திருப்பி திருப்பி போட்டால் எனக்கு படம் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. 

நிருபர் : டைம் லூப் படம் என்று சொல்லியிருந்தார்கள்.

அந்த நபர் : அதை என்னிடம் யாரும் சொல்லவே இல்லை. யாருமே என்னிடம் சொல்லவில்லை. பாதி படத்திலேயே நான் எழுந்து வந்துவிட்டேன். ஒரே தலைவலி என்று அந்த நபர் கூற, அடுத்தபடியாக வெங்கட்பிரபு அதற்கு ரியாக்ஷன் கொடுப்பது போல இந்த வீடியோவை எடிட் செய்து, நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. 

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manadu bremji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->