மாநாடு வெற்றி விழாவில் முதல்வர் குறித்து பேசிய சந்திரசேகர் ‌! சர்ச்சையாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார்.‌ வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. தமிழில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு தரப்பு எதிர்க்கும். ஆனால் மாநாடு படத்தில் அப்படி நெகடிவ் விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை. 

அந்த வகையில் இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் நடிகர் சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் இன்னும் பார்க்க முடியவில்லை என்றும், முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தில் வரும் மத அரசியல் கட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கின்றது என அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manadu success meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->