#Breaking: பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..! - Seithipunal
Seithipunal


திரையுலகில் முன்னணி பாடகராகரும் பக்தி பாடகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார்.

பிரபல திரைப்பட பாடகர் மாணிக்க விநாயகம் மறைந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.  தமிழ் இசை உலகில் தனது கனீர் குரலால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். 

பாடகராக மட்டுமின்றி திருடா திருடி, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் சுமார் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை 6 :45 மணியளவில் அவரது இல்லத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின்  மறைவிற்கு திரைதுறையினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manicka Vinayagam Pass Away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->