கண்மணி பாடல் - இளையராஜா நோட்டீஸுக்கு விளக்கம் கொடுத்த "மஞ்சுமல் பாய்ஸ்" படக்குழு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ் கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த 'குணா' படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடலை பயன்படுத்தி இருந்தனர். இது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

ஆனால், கண்மணி அன்போடு பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், பாடலை உருவாக்கிய இளையராஜவே பாடலுக்கான முழு உரிமையும் பெற்றவர். 

அவரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இளையராஜா நோட்டீசுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், "கண்மணி அன்போடு பாடலை உரிமம் பெற்றே பயன்படுத்தி உள்ளோம். இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manjumal boys explain music director ilaiyaraja notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->