சென்னையில் அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
KN Nehru say about Chennai Rain
அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
English Summary
KN Nehru say about Chennai Rain