சென்னையில் மழை - அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் மழைக்கு, தமிழக அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, 

சென்னையில் நேற்று 131 மி.மீ அளவில் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை பொழிந்தும் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

பருவமழையினை எதிர்கொள்ள 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 412 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது
பெருநகர சென்னை மாநகராட்சியில் 21,000 களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டனர்.

நேற்று 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகரில் சாலைகளில் விழுந்த 67 மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலை உணவு 1000 நபர்களுக்கும், மதிய உணவு 45,250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று காலை உணவு 4,16,000 நபர்களுக்கும் என மொத்தம் 7,18,885 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Rains TN Govt Works


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->