16 இலட்சம் லிட்டர் பால் விற்பனை - ஆவின் நிர்வாகம் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


தீவிர மழைக்காலத்திலும் தங்குதடையின்றி பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், 201 க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரபட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் தினமும் 14.50 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்ததுள்ளது. இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் எல்லாக் காலக்கட்டத்திலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Rains Aavin Milk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->