ஏ.ஆர். ரகுமான் இப்போது எப்படி இருக்கிறார்? CM ஸ்டாலின் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
CM Stalin Say About AR Rahman Health update
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனே அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ரகுமான், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாட்டு பரிசோதனைகளின் பின்னர், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பின் அவரது நிலைமை கவனிக்கத்தக்க முறையில் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏ.ஆர். ரகுமானின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவரது உடல்நல சீரடைவு குறித்து கவலை தெரிவித்து வருவதுடன், விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை முதல்வர் உதயநிதி தெரிவிக்கையில், "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin Say About AR Rahman Health update