இசைப்புயலுக்கு என்ன ஆச்சு..? பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.!
music director ar rahman admitted hospital for health issue
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனால், உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார்.
மேலும், சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் உதவியதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஏ.ஆர். ரகுமானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.
English Summary
music director ar rahman admitted hospital for health issue