ஆபாச அக்கவுண்டில்.. கமெண்ட்.! "எதிர்நீச்சல்" ஆதி குணசேகரனுக்கு வந்த சோதனை.! மகன் வெளியிட்ட உண்மை.! - Seithipunal
Seithipunal


திரைப்பட இயக்குனராகவும், துணை இயக்குனராகவும், குணச்சித்திர கதாபாத்திர வேடங்களிலும் நடித்து இருப்பவர்தான் நடிகர் மாரிமுத்து. இவரது நடிப்பு திறமையை நாம் வார்த்தைகளில் கூறி விட முடியாது அந்த அளவிற்கு எதார்த்தமாக அவர் நடித்து இருப்பார்.

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் ஆணாதிக்க வாதியாக நடித்து வருகின்றார். அதில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை விட வாழ்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். 

இவருக்கு நிறைய பாலோயர்கள் சமூக வலைதளங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் அரைகுறை உடையுடன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதியப்பட்ட கணக்கு ஒன்றில் எனக்கு கால் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. 

அந்தப் பதிவில் மாரிமுத்து பெயரில் இருக்கும் ஒரு அக்கவுண்டில் சென்று கால் மீ என்று கூறி மாரிமுத்துவின் செல்போன் எண் கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்தால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைய வைத்தார்கள். 

இந்த நிலையில் மாரிமுத்து மகன் அகிலன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "இது என் தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கு. தந்தையின் செல்போன் எண் பலரிடமும் இருக்கிறது. அவர்களில் யாரோ ஒருவர் தான் தந்தையை பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோல செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marimuthu son akilan explained fake account issues


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->