'இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்.?' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை.!
Mgm Hospital management about director Bharathitaja condition
இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா உடல் நல குறைவு ஏற்பட்டு தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நெஞ்சு சளி ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், தற்போது எம்ஜிஎம் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தற்போதுள்ள உடல்நிலை குறித்தும், இதுவரை அவருக்கு அழைக்கப்பட்டுள்ள சிகிச்சை பற்றியும், மேலும் அவர்களுக்கு எந்தவிதமான உயர்தர தீவிர சிகிச்சைகள் மேற்கொள்வது என்பது குறித்தும் கீழ்க்கண்ட மருத்துவர்கள் பாரதிராஜாவை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரித்தும், சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திரு பாரதிராஜா அவர்களின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் சீராக இருக்கிறது. என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mgm Hospital management about director Bharathitaja condition