பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்.!
MK Stalin speech about iravin nizhal
இயக்குனர் பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப் படம் தான் 'இரவின் நிழல்'. இது உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை கொண்டது.
திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றது. இதற்கிடையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற ஒரு தியேட்டரில் இந்த இரவின் நிழல் படத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து இருக்கின்றார்.
அப்போது அவருடன் நடிகர் பார்த்திபனும் இருந்தார். பார்த்திபனின் இந்த சாதனை முயற்சியை பாராட்டி, ஸ்டாலின், "இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம்!" என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், 'எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன். ஒத்தசெருப்பு-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம். இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பார்த்திபன், "நான் லீனியர்-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன. இனி பார். பார்க்க பாராட்டும்'' என்று கூறியுள்ளார்.
English Summary
MK Stalin speech about iravin nizhal