செம்ம சூப்பர்... சீதாராமன் பார்ட் - 2... ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட சீதா! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பழமொழிகளில் வெளியாகி வெற்றியடைந்த படம் சீதாராமன். இந்தத் திரைப்படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள்  தாக்கூர் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

1960  காலகட்டத்தில் நடக்கும் கதை அமைப்பு கொண்ட இந்த திரைப்படத்திற்கு  ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தனக்கு யாருமே இல்லாத ஒரு ராணுவ வீரன் தனது மனைவி சீதா என்ற பெயரில் வரும் கடிதங்களை பின் தொடர்ந்து அந்த கடிதம் அனுப்பும் நபரை காதலிக்க தொடங்குகிறான். இந்த கதையுமசத்தை கொண்ட திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த மிருணாள் தாகூர் தனது ட்விட்டர் சமூக வலைதளத்தின் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார். அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சீதாராமன் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி கேட்டார். 

அதற்கு பதிலளித்த அவர் அதைப் பற்றி எனக்கு ஐடியா இல்லை, ஆனால் இரண்டாம் பாகம் தயாரித்தால் கண்டிப்பாக நான் அதில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mrinal Thakur answered the question of fans i only have a desire to be


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->