ஜிம்மில் விறுவிறுப்பாக வொர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! அசந்து போன ரசிகர்கள்.!
mullai gym video viral
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.
சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், காவியா அறிவுமணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிம் வீடியோ ரசிகர்கள் வியக்கும் விதமாக அமைந்துள்ளது.