ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும்; ராகுல் காந்தி வலியுறுத்தல்..!
Caste wise census law should be brought Rahul's speech
''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அஹ மதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டுமென்றே எதிர்க்கிறார் எனவும், நாட்டின் மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கை அவர்கள் வெளியிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை தாங்கள் எடுத்ததாகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தான் பாராளுமன்றத்தில், பிரதமர் மோடியிடம் கேட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், தெலுங்கானா என்ன செய்ததோ, அதை நாங்கள் நாடு முழுவதும் செய்யப் போகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வக்ப் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வக்ப் திருத்த சட்ட மசோதா கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பிற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனவும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
English Summary
Caste wise census law should be brought Rahul's speech