ஒரே மாவட்டத்தில் 194 போலீசார் இடமாற்றம் - நடந்தது என்ன?
194 police officers transfer in vilupuram district
விழுப்புரம் மட்டத்தில் 194 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி காணை காவல் நிலையத்திற்கும், வளவனூர் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் கண்டமங்கலத்திற்கும், அனந்தபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மேல்மலையனூருக்கும், விழுப்புரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், மயிலம் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் கெடாருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதே போன்று சிறப்பு உதவி ஆய்வாளர்களான கிளியனூர் பாலமுருகன் வானூருக்கும், கோட்டக்குப்பம் ஏழுமலை ஆரோவில் காவல் நிலையத்திற்கும், ஒலக்கூர் கலைமணி ரோஷணைக்கும், விழுப்புரம் மேற்கு நாகராஜ் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கும், கண்டமங்கலம் சண்முகசுந்தரம் அரகண்டநல்லூருக்கும், விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு மரியபிரான்சிஸ் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் லதா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் மற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 35 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து 62 போலீஸ் ஏட்டுகள், 97 போலீஸ்காரர்கள் என்று மொத்தம் 194 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட 194 போலீசாரும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால் அவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
194 police officers transfer in vilupuram district