இயக்குனர் ராஜமௌலி வீட்டில் இறுதிச்சடங்கு.. பிரபலத்தின் தாய் உயிரிழப்பு.!
Music Director Keeravani Mother Death
பாகுபலி திரைப்பட இசையமைப்பாளரான கீரவாணியின் தாய் உயிரிழந்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகிய திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெற்றியடைந்ததற்க்கு கதைகளம் எந்த முக்கியமோ இசையும் பெரும் பங்காற்றியது என்று கூறினால் மிகையாகாது .
பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணியின் திறமை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், கீரவாணியின் தாயார் பால சரஸ்வதி உயிரிழந்துள்ளார் ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக பாலசரஸ்வதி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார் .அவரின் இறுதிச் சடங்குகள் பாகுபலி பட இயக்குனரான ராஜமவுலியின் வீட்டில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Music Director Keeravani Mother Death