'கோல்டன் குளோப் விருது'.. நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் கீரவாணி!
Music director thanks to rajamouli for golden globe award
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த இயக்குனர் ராஜமௌலி. அதன் பிறகு அவர் இயக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
இதனையடுத்து இயக்குனர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆரை வைத்து 'RRR' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கினார். மேலும், இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அலியா பட் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆஸ்கார் விருதுக்கான போட்டி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் உள்ள நிலையில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த விருது குறித்து பேசிய இசையமைப்பாளர் கீரவாணி விருது வென்ற மகிழ்ச்சியை எனது மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறேன். விருது வாங்கிவிட்டு இப்படி சொல்லக்கூடாது தான் ஆனாலும் சொல்கிறேன். இந்த விருது எனக்கானது அல்ல. எனது சகோதரர் ராஜமவுலிக்கு உரியதாகும் அவரது ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
English Summary
Music director thanks to rajamouli for golden globe award