"எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன் சார்" தமிழ் படத்தில் நடிக்க வேண்டும்! - ஜூனியர் என்.டி.ஆர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவருடைய 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி உள்ளார்.

இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயர் பெயரிடப்பட்டுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

மேலும் இந்த  'தேவரா பாகம்-1' படத்தில் நடிகர்கள் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தது. சமீபத்தில், 'தேவரா பாகம்-1' இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படம் வருகிற செப் 27-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், இந்த படத்தின் படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன்படி, இப்படத்தின் படக்குழு சென்னையில் கலந்துகொண்டது, இதில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்விகபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர் கூறியதாவது:-

"எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன் சார், என்னை வைத்து ஒரு தமிழ் படம் பண்ணுங்க சார். அதை நேரடியாக தமிழில் எடுத்து பின்னர் தெலுங்கில் டப் செய்யலாம், என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My favorite director Vetrimaran sir wants to act in a Tamil film Junior NTR


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->