எனது இலக்கு எப்போதும் சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு செல்வதே! சின்னத்திரை நடிகை பிரியங்கா குமார்! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காற்றுக்கென்ன வேலி" தொடரில் கதா நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார். இத்தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பிரியங்காவின் புதிய பட வாய்ப்புகளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கெனவே நடிகை பிரியங்கா குமார் அதுரி லவ்வர் மற்றும் ருத்ர கருட புராணம் போன்ற தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது அவர் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இம்முறை இந்த படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் நடிகை பிரியங்காவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர் மன்சோரே இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் புல்லாங்குழல் கலைஞராக நடிகை பிரியங்கா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா குமார் இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது இலக்கு எப்போதும் சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு செல்வதே ஆகும். அந்த வாய்ப்பை  நான் இப்போது அடைந்துவிட்டேன். இப்படத்திற்காக மைசூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பாலுவின் வழிகாட்டுதலின் கீழ் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொள்ளவும் உறுதியான நடிப்பை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறேன். 

இசைக்கருவியில் தேர்ச்சி பெறுவது ஒரு பயணம். இதில், மூச்சுக் கட்டுப்பாடு நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கிறது, ஆனால் பயிற்சி செய்வதால் அது சவாலாக இருக்காது என்று நம்புகிறேன்,' என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My goal has always been to move from small screen to movies Small screen actress Priyanka Kumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->