சிம்புவை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசிய மிஷ்கின்.?! ரசிகர்கள் கொந்தளிப்பு.!
Mysskin about simbu
இயக்குனர் மிஷ்கின் திரைக்குப் பின்னால் எப்படி எதார்த்தமாக இருக்கிறாரோ அப்படித்தான் அவரது பேட்டிகளிலும் நடந்து கொள்வார். பல மேடைப் பேச்சுக்களிலும் கூட அவர் மிக எளிமையாக மற்றும் சாதாரணமாகவே நடந்து கொள்வார். இது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப் பட்டாலும் அவர் அவராகவே அனைத்து இடங்களிலும் இருப்பது உண்மையில் வியக்கத்தக்க விஷயம் தான்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கின் சிம்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், "நான் சிம்புவிடம் கதை கூறியுள்ளேன். சிம்பு என்னுடைய கதையை கேட்டு மிரண்டு போய் விட்டான்." என்று தெரிவித்துள்ளார். சிம்புவை அவன்இவன் என்று அவர் ஒருமையில் பேசியது ரசிகர்களுக்கு தற்போது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஆனால், சிம்புவிற்கு இது பெரிய விஷயமாகவே தோன்றவில்லையாம். தற்போது நடிகர் சிம்பு பத்து தலை மற்றும் வெந்து தனிந்தது காடு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுதா கொங்கரா, ராம் மற்றும் மிஷ்கினுடன் கதை குறித்து ஆலோசித்து வருவதாகவும் இவர்களில் யாராவது ஒருவரின் படத்தில் தான் அவர் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.