பிசாசு 2 இயக்குனர் மிஷ்கினுக்கு பிடித்த நடிகை இவர்தானாம்.! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.!
mysskin favorite actress
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கடந்த 2016ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம்தான் பிசாசு. அதில் பேய் கதாபாத்திரத்தை ஒரு தேவதையைப் போல மிஷ்கின் காட்டி இருப்பார்.
இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட படம் அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் தனக்கு மிகவும் பிடித்த நடிகை பாவனா என்று தெரிவித்துள்ளார்.
"பாவனா எந்த ஒரு விஷயத்தையும் கற்பூரம் போல உடனடியாக செய்து முடிக்கக் கூடிய திறமை கொண்டவர். அதுபோல பூர்ணாவும் தீயாக வேலை செய்வார். நடிகை நித்யாமேனன் எவ்வளவு வேலைகள் கொடுத்தாலும் சளைக்காமல் செய்து முடிப்பார். இந்த மூன்று நடிகைகளும் தான் தன்னை கவர்ந்தவர்கள்." என்று மிஷ்கின் மனம் திறந்து பேசியுள்ளார்.