"நாதஸ்வரம்" சீரியல் நடிகையின் கணவர் திடீர் மரணம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் மெகா சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய கணவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி சின்னத்திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரவிந்த் சேகர் உடற்பயிற்சி மேற்கொள்வதால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் அரவிந்த் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரவிந்த் மற்றும் ஸ்ருதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். சுற்றுலா செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுக்காக இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி தனது பிசினஸில் கவனம் செலுத்திய ஸ்ருதிக்கு அரவிந்த் மறைவு பேரிழப்பு தான். கணவனை இழந்த ஸ்ருதிக்கு அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nathaswaramserial actress Shruti husband dies suddenly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->