தேசிய விருது தற்போது மோசமான நகைச்சுவையாக மாறிவிட்டது - பிரபல இயக்குனர் குமுறல்.! - Seithipunal
Seithipunal


ஜான் ஆப்ரஹாம் நினைவு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பழம்பெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், 

"தேசிய விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர்கள் ஹிந்தி பட ரசிகர்களாக இருக்கிறார்கள்.‌ மேலும் அவர்கள் இரண்டு படங்களைப் பார்ப்பதற்கே சலிப்படைகிறார்களாம். 

சினிமாவை கலை வடிவமாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு சினிமா குறித்த அடிப்படை அறிவு இருப்பதில்லை. 

தேசிய விருது தற்போது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது. விருது வழங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று தெரியவில்லை.  

ஒரு காலத்தில் விருதுகளை  தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள்  இருந்தார்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழில் சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. 

இதனை போன்றே, மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்துக்காக சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடகி, சிறந்த சண்டை இயக்கம் என 4 தேசிய விருதுகளை வழங்கப்பட்டது. 

தன்ஹாஜி படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அஜய் தேவ்கனுக்கு விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Award now bad comedy famous director Adoor Gopalakrishnan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->