நடிகராக அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக உள்ள சீனு ராமசாமி தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் சி.வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சி.வி குமார் இன்று துவங்கி வைத்தார்.

தங்கம் சினிமாஸ் சார்பில் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து கால கட்டத்திற்கும் ஏற்றார் போல் இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா இணைந்துள்ளார். மேலும் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி நடிக்கும் காட்சி முதல் நாளான இன்று படமாக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் புதிய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என இயக்குநர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் உள்ளார். சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும் என இயக்குநர் விஜய் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பு விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. ஏ.எஸ் சூரியா ஒளிப்பதிவு செய்ய, அதனை வி.பி வெங்கட் நேர்த்தியாக எடிட் செய்ய, அதற்கு ஏற்றார் போல் எஸ்.ஆர் ஹரி இசையமைக்க உள்ளார்.

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் தயாரிப்பில், விஜய் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National award winning director Seenu Ramasamy to debut as actor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->