ஹைதராபாத்தில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் நயன்தாரா! பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக வாங்குகிறாரா! - Seithipunal
Seithipunal


20 வருட சினிமா வாழ்க்கையில் பெரியதாக சொத்து வாங்காத நடிகை தற்பொழுது சொத்துக்களை வாங்கி குவிக்கிறாரா?

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என கூறப்படும் நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பல கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நிலைத்திருக்கிறார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் பேரும் புகழும் பணமும் இருந்திருந்தாலும் பெருமளவில் சொத்துக்களை வாங்கியதே இல்லை. நீண்ட காலமாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணை சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியா போட்டியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒப்பந்தம் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அரசியல் தலைவர்களின் தொடர்புகள் உறுதியானதால் குறுகிய கால இடைவெளியில் பல கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஹைதராபாத்தில் தனது காலை பதிக்க போவதாக செய்திகள் கசிந்த நிலையில் தற்பொழுது நயன்தாராவும் ஹைதராபாத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara buys property in Hyderabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->