ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதே போலீஸ் தான் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.!
chennai high court warning tn police for name to rowdy
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் செய்யது மீரா அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரவுடிகளுக்கு பாம் சரவணன், பாம்பு நாகராஜன் என்று எதற்கு பட்டப்பெயர்? போலீஸ் பக்ருதீன் தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. ரவுடிகளுக்கு பட்டப்பெயர்களை வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர் பாதிக்கப்படுகிறது. ரவுடிகளை பட்ட பெயர் வைத்து அழைப்பதே காவல்துறையினர் தான். ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
English Summary
chennai high court warning tn police for name to rowdy