பணி நிரந்தரம் செய்யவேண்டும்.. காமராசர் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர்கள் போராட்டம்!
The job should be made permanent. Kamarajar Krishi Vigyan Kendra workers protest
பணி நிரந்தரம், நிலுவை சம்பளம் கேட்டு,புதுச்சேரி பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர்கள்(AITUC) தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அய்யங்குட்டி பாளையம் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் முன்பு (AITUC) தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது
புதுச்சேரி அய்யங்குட்டி பாளையம் பெருந்தலைவர் காமராசர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக கடந்த 20 ஆண்டுகளாக பண்ணையில் விவசாய வேலைகளை செய்து வருகிறார்கள், இவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிடவும் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்,
இந்த நிலையில் இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக ரேட்டிபிகேஷன் செய்யப்பட்டு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது,இந்தநிலையில் இவர்களுக்கு வழங்க வேண்டிய 51 மாதம் நிலுவை சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது ,
இதனை கொடுப்பதற்கும் பணி நிரந்தரம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் EPF நிலுவை தொகையை உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் முன்பு (AITUC) தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
English Summary
The job should be made permanent. Kamarajar Krishi Vigyan Kendra workers protest