திருவள்ளூர் அருகே பரபரப்பு - ஏலசீட்டு மூலம் 4 கோடி சுருட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர்.!
police investigation four crores money fraud case in thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கமலக்கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். அதே சமயம் இவர் ஏலச் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதில் அம்பத்தூர், புதூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர்.
ஆனால், கமலக்கண்ணன் பணம் கட்டி முடித்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கமலக் கண்ணனுக்கு பணத்தைத் திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணன் கடந்த மாதம் திடீரென தலைமறைவானார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பணம் கட்டியவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கமலக் கண்ணன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கமலக்கண்ணன் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவான கமலக்கண்ணனை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
English Summary
police investigation four crores money fraud case in thiruvallur