புது பிசினஸில் தடம் பதித்த நயன்தாரா - குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாரா பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான '9ஸ்கின்' என்பதில் மலேசிய நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Femi9' எனும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 

இதனை விஜயதசமி நாளான நேற்று இதைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அறிவித்துள்ளார்.

அதில், 'இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல! என்னுடைய நீண்டநாள் கனவு. பெண்களுக்காக பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். 

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம்' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக லிப்பாம் கம்பெனி, டீ பிசினஸ், உணவு பிசினஸ் என்று பலவற்றில் முதலீடு செய்துள்ள நயன்தாரா தற்போது நாப்கின் பிசினஸிலும் தடம் பதித்துள்ளதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara start new business


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->