விக்னேஷ்சிவன் படத்திலிருந்து விலகும் நயன்தாரா.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


'லவ் டுடே’ படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ’எல்ஐசி’ (’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’) என்று தலைப்பு வைத்துள்ளார்.

ஆனால், இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கூறி வந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி நிறுவனமும் இந்த தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே, படத்தில் பிரதீப்புக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் இவர்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சீமான் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ‘ஜவான்’ படத்தின் பாலிவுட் எண்ட்ரி மூலம் தனது சம்பளத்தை நயன்தாரா ரூ.12 கோடியாக உயர்த்தி விட்டதால், இதே சம்பளத்தை ‘எல்ஐசி’ படத் தயாரிப்பாளர்களிடமும் கேட்டுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட் நயன்தாரா சம்பளத்தால் அதிகமாகிவிடும் என்று கருதி, வேறு ஹீரோயினைத் தேர்ந்தெடுக்கலாம் என்றுச் சொல்லி இருக்கிறாராம் தயாரிப்பாளர் லலித்.

இதனால், நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலகுவதாகவும் இன்னும் சிலர் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara withdraw vigneshshivan film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->