இதே போல் உங்கள் அறையில் நடந்திருந்தால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா - கொந்தளிப்பில் அனுஷ்கா சர்மா.!
near austreliya virat kholi hotel room vedio
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டியில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என்று மொத்தம் நான்கு புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் ஹோட்டல் ரூமிற்குள் ரசிகர் ஒருவர் நுழைந்து உள்ளிருக்கும் உடைமைகள் அனைத்தையும் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, "எப்போதும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் என்பதையும், அதிலும் அவர்களைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். நான் அதை எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இந்த வீடியோ எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், இந்த வீடியோ எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என்னுடையச் சொந்த ஹோட்டல் அறையில் கூட எனக்கு தனியுரிமை இல்லை என்றால், வேறு எங்கு அதை நான் எதிர்பார்க்க முடியும். இதுமாதிரியான செயல்களை நான் ஏற்பதில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள். அவர்களை வெறும் பொழுதுபோக்கிற்கானப் பொருளாகக் கருத வேண்டாம்" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அனுஸ்கா சர்மா பதிவிட்டதாவது,
"என்னுடைய கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான செயல். சிலர் சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா" என்று கடும் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
near austreliya virat kholi hotel room vedio