கவினின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா.? வெளியான புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை அவரது நண்பர் கணேஷ் பாபு என்பவர் இயக்கியிருந்தார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பற்றி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். கவின் தற்போது இவரது  அடுத்த திரைப்படத்திற்கான  தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

நடன இயக்குனரான சதீஷ் என்பவரின் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அந்தத் திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. தற்போது இவர் மற்றொரு இயக்குனருடன் இணைய இருக்கிறார்.

பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கியவர் இலன். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளி வந்திருக்கின்றன. ஆனால் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new information about the next movie of dada fame kavin came out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->