காதலிலும் ரீ என்ட்ரீயா.?! சிம்பு நித்தி அகர்வால் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை.!
Nithi Agarwal and Simbu love
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது காதலிலும் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரீ கொடுத்தார். முதல் படம் மிகவும் மொக்கையாக இருந்தாலும் அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்துள்ளார் என்று ஆணித்தனமாக அனைவருக்கும் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் யுவன் இசை மற்றும் வெங்கட்பிரபுவின் திறமை என்று கூறினால் அது மிகையாகாது. 100 கோடி வசூலை பெற்று மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் 10 தல படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியிருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. நடிகர் சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவருக்கும் இடையில் காதல் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Nithi Agarwal and Simbu love