நடிகைக்கு பாலியல் தொல்லை.. அமலாபால் கொடுத்த புகாரில் கைதான வடமாநிலத்தவர்.!
North Indian men arrested who was sexually harassed actress amala paul
மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் மைனா திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபல நடிகையாக அறிமுகமானார். மைனா திரைப்படத்தில் தனது திறமையை காட்டி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அமலா பால் பெற்றார்.
பின்னர், இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். ஏ.எல்.விஜய் மறுமணம் செய்து கொண்டார். பின், நடிகை அமலாபால் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறார். ஆடை திரைப்படத்தில் இவர் நிர்வாணமாக திறம்பட நடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.
இத்தகைய சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் வீட்டில் நடிகை அமலா பால் தங்கி இருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக விழுப்புரம் மாவட்ட எஸ் பி இடம் அமலாபால் புகார் கொடுத்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த பவன்தெர் சிங் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
North Indian men arrested who was sexually harassed actress amala paul