சிறந்த நடிகர், நடிகை ஆஸ்கார் விருதுகளை வாங்கியது இவர்களா?!
Oscar Award 2023 Actor
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவின் முத்தாரமாக ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு., நாட்டு., பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்த பாடலை ரசித்து பார்த்த அனைவருமே எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு" பாடல் தட்டித் தூக்கியது. மேலும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட “தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ்” படம் வென்றது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ’தி வேல்’ படத்திற்காக வென்றார் நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் வென்றார்.
மொத்தம் 7 விருதுகளை ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் வென்றது. இதில்,
சிறந்த நடிகை மிஷெல் யோவ்,
சிறந்த துணை நடிகர் கே ஹுய் குவான்
சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ்
சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங்-க்கான ஆஸ்கர் விருதையும் வென்றது ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” வென்றுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்”
சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை வென்றது ”டாப் கன் : மேவரிக்”
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது “உமன் டாக்கிங்”
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருதை வென்றது ’அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’
சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்”
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை வென்றது ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்” திரைப்படம்
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது “தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்”
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது ”ப்ளாக் பான்தர் : வகாண்டா ஃபாரெவர்”
சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை வென்றது “ தி வேல்”
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ’நவால்னி’