சைபர் குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் ..திரவுபதி முர்மு வேதனை!  - Seithipunal
Seithipunal


சைபர் குற்றங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் ,இளைஞர்களுக்கு சைபர் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொழில்நுட்பம் வளர வளர குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே செல்கிறது. ஆன்லைன் மோசடி ,டிஜிட்டல் கைது உள்ளிட்ட மோசடி செயல்கள் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் குற்றசெயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சைபர் குற்றங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படுவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில்தெரிவித்திருப்பதாவது.அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தில், சைபர் பாதுகாப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது என்றும்  டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் மற்றும் டீப் பேக் படங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நமது சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என கூறியுள்ளார் . 

மேலும் இந்திய அரசாங்கம் இந்த சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும்  இளைஞர்களுக்கு சைபர் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyber crimes pose a challenge to national security. Draupadi Murmu in agony


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->