தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு அதிரடி! - Seithipunal
Seithipunal


நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நியமனங்களின்படி, இன்னசன்ட் திவ்யா தொழில்நுட்பக் கல்வி ஆணையராகவும், கண்ணன் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ், திண்டுக்கல் ஆட்சியராக சரவணன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ் குமார், விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருவண்ணாமலை ஆட்சியராக தர்ப்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், நெல்லை ஆட்சியராக சுகுமார், திருவாரூர் ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியராக இருந்த பழனி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராகவும், லலித் ஆதித்யா நீலம் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ராமன் தொழிலாளர் நல ஆணையராகவும், சரயு பொதுத் துறை இணை ஆணையராகவும், ஸ்ருதன்ஜய் நாராயணன் மின் ஆளுமை முகமையின் இணைய தலைமை செயல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IAS Transfers jan 2025 TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->