ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியா!
Junior Women's T20 World Cup: India beat England to reach final for second time
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிஉள்ளது.இதேபோல மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தநிலையில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை டேவினா பெர்ரின் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.இதையடுத்து ஜெமிமா ஸ்பென்ஸ் 9 ரன்களிலும், டுருடி ஜான்சன் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து இக்கட்டான நிலையிலிருந்து அணியை டேவினா பெர்ரின் மற்றும் கேப்டன் அபி கை கோர்த்து மீட்ட நிலையில் டேவினா பெர்ரின் 45 ரன்களிலும், அபி 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது .இதில் இந்தியா தரப்பில் வைஷ்னவி சர்மா மற்றும் சிசோடியா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர் .
இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர் . தொடக்க வீராங்கனை திரிஷா 35 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை கமிலினி அரைசதம் அடித்து அணியை எளிதில் வெற்றி பெற வைத்தார்.
கடைசியாக வெறும் 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 117 எடுத்து வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போது திரிஷா 56 ரன்களுடனும், சனிகா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .
English Summary
Junior Women's T20 World Cup: India beat England to reach final for second time