கன்னட படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை - நடிகர் ரிஷப் ஷெட்டி வருத்தம் - Seithipunal
Seithipunal


கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை என்று, நடிகர்  ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். 

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான  கன்னட திரைப்படமான காந்தாரா, திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. 

ரிஷப் ஷெட்டி இயக்கிய இந்த படத்தில், அவரே கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையே நேற்று 70-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

அதில், சிறந்த நடிகருக்கான விருது ரிஷப் ஷெட்டிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது காந்தாராவுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், நம் படங்கள் விழாக்களில் திரையிடப்படுகின்றன, மேலும் விருதுகளை வாங்குகின்றன. இருந்தும், எந்த தளமும் நமக்கு கிடைக்கவில்லை. கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை என்றும், இதனால், யூடியூபில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ott companies do not want to buy Kannada films actor Rishabh Shetty regrets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->