அந்த காரணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை.. அவரே இன்ஸ்டா-வில் சோக பதிவு.!
Pandiyan Stores kavya arivumani in Biggboss 6
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. நகரம் முதல் கிராமம் வரை, முதியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ். இதில் திரை துறையை சேர்ந்த பிரபலங்களை ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்கவைத்து அவர்களுக்குள் ஏற்படும் அன்பு, காதல், கோபம் அனைத்தையும் படம்பிடித்து காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவார்கள்.
அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து, தற்பொழுது 6 வது சீசனை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி 6- வது சீசன் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இதுகுறித்து சமீபத்தில் வெளியாகியுள்ளது புரோமோ வீடியோ ஒன்று.
அதில் சாதாரண மக்களும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த பிக்பாஸ் 6- வது சீசனில் நடிகை காவியா அறிவுமணி கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இதில், கலந்து கொள்ள இருக்கின்ற காரணத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா அறிவுமணி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சமீபத்தில் காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார், அவரை பிக்பாஸில் பார்ப்பத்தில் ரசிகர்களுக்கு சந்தோஷம் தான் என்றாலும் இனி முல்லையாக அவரை பார்க்க முடியாதே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Pandiyan Stores kavya arivumani in Biggboss 6