பவுடரை தூக்கலாக போட்டு ரசிகர்களை பதற வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!
Pandiyan stores mullai powder reels viral
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது. சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.
இருப்பினும் இந்த கதாபாத்திரத்தில் நடித்த பின்னர்தான் காவியா அறிவு மணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் பிரபலமடைந்த அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகை காவியா அறிவு நிலை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டயலாக் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Pandiyan stores mullai powder reels viral