விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் முதல் படத்திற்கே உலக விருது! வாழ்த்து மழை பொழியும் திரையுலகம்!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலரான நடிகை நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த கம்பெனியின் முதல் படமாக கூழாங்கல் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருவதற்கு தயாராக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், கடந்த சில தினங்களுக்கு முன் திரையிடப்பட்டது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் கூழாங்கல் படக்குழுவினர் கலந்துகொண்டனர். கூழாங்கல் பட போஸ்டர்களே அனைவரின் மனதையும் கொள்ளையடிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. 

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கூழாங்கல் திரைப்படம் டைகர் விருது வென்றுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விஷாவில் பங்கேற்ற படக்குழுவினரின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது திரையுலகை சார்ந்த பலரும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pebbles won tiger award which productions by vignesh sivan and Nayanthara


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->