உயர்நீதிமன்ற தீர்ப்பு: அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!
ADMK Chennai HC Case Edappadi Palaniswami OPS
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் குறித்து ஆராயவும், சின்னம் ஒதுக்கீடு சட்டப்படி விசாரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமைச் செயலாளர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க. உறுப்பினர் அல்லாதவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை ஏற்பட்டால், அதனை தெரிவிக்க வேண்டியது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை. கட்சியின் விதிகள் திருத்தம் செய்தல், பதிவு செய்தல் போன்றவை அதன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.
ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை. கட்சியில் இல்லாதவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக்கூடாது எனவும், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த அதிகாரம் பெற்றதா என்பது முதலில் தீர்மானிக்கப்படவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Chennai HC Case Edappadi Palaniswami OPS