விஜய் சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் இதோ !! - Seithipunal
Seithipunal


சினிமா : விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி நடித்த பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து பின்னர் ஹீரோவாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விஜய் சேதுபதி. அவர் தனக்கான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி  வருகிறார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் மற்றும் நானும் ரவுடிதான் படங்களில் அவருடைய மகன் சூர்யா சிறப்பு  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார்.
இந்த படத்தை சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகளில் சூர்யா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் பேட்டி ஒன்று பேசிய சூர்யா விஜய் சேதுபதிக்கு பதிலாக சூர்யா என போட சொன்னேன் என்று கூறினார். அடுத்து அப்பாவோட படத்தில் சேர்ந்து நடிப்பேனா என்று கேட்டால் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி நடித்த பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Phoenix Veehaan Movie Teaser


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->