தமிழகம் சிறுபான்மையின மக்களுக்கு சொந்த வீடு போன்றது - DyCM உதயநிதி ஸ்டாலின்!
DyCM Udhayanidhi Stalin Speech
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்நாடு சிறுபான்மையினருக்கு சொந்த வீட்டைப் போல் இருக்கின்ற ஒரே மாநிலம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் முதல்வர் என்றும் கூறினார். முத்தலாக் சட்டம், NRC போன்ற சிறுபான்மையின மக்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது வக்ஃப் வாரிய திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் வகையில் இருக்கிறதா என்ற கவலையை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்றும், இதனால், மசோதாவை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
English Summary
DyCM Udhayanidhi Stalin Speech