எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஆதிகுணசேகரன் விலகல்? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் மாரிமுத்து. இவர் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அவர் தற்போது, நடிகராக மாறி அவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்றார்.

சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்குகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதன் மூலமாக அவருக்கு உலக அளவில் வசிக்கின்ற தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. சமீபத்தில், மாரிமுத்து ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார். 

அப்பொழுது, அவர் ஜோதிடர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசியுள்ளார். அதில், ஜோதிடர்கள் தான் மன்னிக்க முடியாத அளவிற்கு குற்றவாளிகள் என்றும், அதன் காரணமாக தான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையே கிடையாது என பேசியுள்ளார்.

இது பற்றி விளக்கம் கேட்டு ஆறுமுகம் ஜோதிடர் மாரிமுத்துவுக்கு ஒரு சம்மன் அனுப்பியுள்ளார். அதற்கு மாரிமுத்து சரியான விளக்கம் கொடுக்கவில்லை. எனவே, அவர் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் மாரிமுத்து மீது புகார் கொடுத்துள்ளனர். 

எனவே, அவர் கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாரிமுத்து கைது செய்யப்பட்டால், எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாப்பாத்திரத்தில் வேறு யாராவது நடிப்பார்களா?எனும் சந்தேகம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police case filed against marimuthu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->