நயன்தாரா குழந்தை விவகாரம்.. போலீசார் அதிரடி முடிவு.?!
police investigation in nayanthara baby born hospital
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நேற்று அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
அவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதுகுறித்து, பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கான விதிமுறைகளை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீறிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இத்தகைய நிலையில், தற்போது தற்போது வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் இது குறித்த சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே, அங்கே சென்று நாளை போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர். எனவே, வாடகை தாய் குறித்த சட்டங்கள் அவருக்கு முறையாக அறிவிக்கப்பட்டதா? இதில் விதிமீறல்கள் ஏதாவது இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க இருக்கின்றனர்.
English Summary
police investigation in nayanthara baby born hospital