இல்லந்தோறும் மாணவர் அணி..உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் சிவா MLA!
Student team at home Siva MLA inaugurates membership drive
உருளையன்பேட்டை தொகுதியில் இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்களும் பொதுக்குழு உறுப்பினர் கோபால் அவர்களும் தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதியில், பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான திரு. எஸ். கோபாலைவர்களும், தொகுதி செயலாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் ஏற்பாட்டின்பேரில் இல்லம்தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது.
மாணவர் அணி அமைப்பாளர் திரு. எஸ். பி. மணிமாறன் முன்னிலையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இல்லங்கள்தோறும் நடந்து சென்று கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை எடுத்துரைத்தும், அதேபோல் கழக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் அமைந்தால் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என உறுதியளித்தும், மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாணவ, மாணவிகளிடம் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் தங்களை திமுக மாணவர் அணியில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் சீதாராமன், தொகுதி அவைத்தலைவர் ஆதிநாராயணன், தொகுதி பிரதிநிதி பொன்னுசாமி, பொருளாளர் சசிக்குமார், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை, இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத் தலைவர் ஸ்ரீதர், துணை அமைப்பாளர் அஜி பாஷா, ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், மாநில விளையாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கண்ணன், ஹரி, ஸ்டீபன் ராஜ், கீர்த்தி எழினி, அமுதன், கிளைக் கழக செயலாளர்கள் சுப்பு, அந்தோணி, இளையநம்பி, முருகன், சாலமன், பிரகாஷ், விஜயகுமார், கிரி, மற்றும் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், பகுதி மாணவர் அணி நிர்வாகிகள் சஞ்சய், குரு பிரசாத், தமிழ்ச்செல்வன் மாற்றம் பகுதி நிர்வாகிகள் பெரோஸ், ராஜா, மூர்த்தி, பாக்கியராஜ், தமிழ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Student team at home Siva MLA inaugurates membership drive